துன்புறுத்தும் நோக்குடன் வழக்கு: முன்பிணை கோரும் பாரதிராஜா

துன்புறுத்தும் நோக்குடன் வழக்கு: முன்பிணை கோரும் பாரதிராஜா

1 mins read

சென்னை: கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள் ளும் விதமாக தமக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் பாரதிராஜா மனு தாக்கல் செய் துள்ளார். இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது இந்து மக்கள் முன்னணி பிரமுகர் போலிசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவாகியுள்ளது. "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அண்மையில் நடந்த போராட்டங்களில் நானும் பங்கேற்றேன். என்னை துன்புறுத்தும் நோக்குடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என பாரதிராஜாவின் பிணை கோரும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்குப் பிணை வழங்க மனுதாரர் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.