'கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்'

'கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோருவோம்'

2 mins read

பனாஜி: கர்நாடகாவில் பெரும் பான்மை இடங்களில் வெற்றி பெறாத நிலையில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளதால் அதற்குப் பதிலடியாக கோவா காங்கிரசும் ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது. கோவாவில் காங்கிரஸ் ஒரு தனிப்பெரும் கட்சியாக இருப்ப தால் அங்கே ஆட்சியமைப்பதற்கு ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம் என்று காங் கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர். "கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்று கூறி பாஜக ஆட்சி யமைக்க உரிமை கோரியது போல கோவாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரசும் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது.

இதன் தொடர்பில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் செல்லகுமார் மற்ற கட்சித் தலைவர்களுடன் சென்று இன்று அம்மாநில ஆளுநரைச் சந் திக்க உள்ளார்," என்று ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன. அப்படி ஆட்சியமைக்க அழைக் காத பட்சத்தில் எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகையில் தர்ணா நடத்தவும் காங்கிரஸ் திட்ட மிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்தக் கட்சியும் பெற வில்லை. அதிகபட்சமாக 104 இடங்களில் பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும் மஜத 37 இடங்களிலும் வென்றுள்ளன. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே. எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்கவேண் டும் என எடியூரப்பா அம்மாநில ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்துக் கோரினார். இதைத்தொடர்ந்து திடீர் திருப்பமாக நேற்று அவர் முதல் வராகப் பதவியேற்றுக்கொண்டார். 40 இடங்கள் கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜக 13, மற்ற கட்சிகள் 10 இடங்களில் வென்றன. சிறிய கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது.