புதுடெல்லி: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி துணைக் காவல் ஆணையர் வேத் பூ ஷன் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனியார் துப்பறி யும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூ ஷன் சில தகவல்களை நேற்று முன்தினம் வெளியிட்டார். "ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது. ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி நீரில் மூழ்கடித்து அவர் மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்யும் போது தடயமே இல்லாமல் செய்துவிட்டு அது தானாக நடந்தது போன்று காண்பிக்கலாம்.
துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்குச் சென்றோம். ஆனால் ஸ்ரீதேவி தங்கியிருந்த அறையில் எங்களை நுழையவிட வில்லை. அதனால் அந்த அறைக் குப் பக்கத்து அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக் கிறார்கள்," என்று தெரிவித்து உள்ளார். இது இந்தி படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 240 கோடி காப்பீட்டுத் தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப் பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

