தமிழக விவசாயிகளுக்கு ரூ.3,265 கோடி இழப்பீடு

தமிழக விவசாயிகளுக்கு ரூ.3,265 கோடி இழப்பீடு

1 mins read

சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தமிழக விவசாயிகளுக்கு 3,265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர 31 மாவட்டங்களில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 31,85,000 ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக அதிக பட்சமாக இழப்பீடு பெற்றுத் தந்து நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.