புதுடெல்லி: காவிரி பிரச்சினை தொடர்பில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்டத்தை நேற்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக இதை அரசிதழில் வெளியிடவும் உத்தரவிட் டது. அதேவேளையில் செயல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த கோரிக்கைகளையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். மத்திய அரசு தாக்கல் செய் துள்ள காவிரி வரைவு செயல் திட் டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உடனே இதனை அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருத்தப்பட்ட செயல் திட்ட அறிக்கையில், தினந்தோறும் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை மேலாண்மை ஆணையம் மாதம்தோறும் கணக்கிட வேண்டும் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும் மாநில அரசின் அதிகாரம், செயல்பாட்டில் தலை யிடுவதாக உள்ளது எனவும் கூறி யிருந்தது.

