பெங்களூரு: பெரும்பான்மை இல் லாமல் முதல்வராக பதவியேற்ற பாஜகவின் எடியூராப்பா காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய தாகக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மே 17ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்ளவிருந்தார். ஆனால், பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சியிலிருந்து 8 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும்.
இந்நிலையில் காங்கிரசு எம் எல் ஏ பிசி பாட்டிலிடம் எடியூரப்பா ரூ.15 கோடி பேரம் பேசிய ஒலிப் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் உலா வருகிறது. ஆனால் அந்தக் குரல் அவரு டையது இல்லை என்று அவரது கட்சியினர் கூறியுள்ளனர். அந்த ஒலிப்பதிவில், "கொச் சிக்குப் பேருந்தில் சென்று கொண் டிருக்கிறேன் என்று காங்கிரசு எம்எல்ஏ சொல்கிறார். "அதற்கு இன்னொருவர் நீங் கள் பேருந்தில் செல்ல வேண்டாம். இங்கே வந்துவிடுங்கள் என்றும் உங்களை அமைச்சராக்குகிறேன் என்று அவர் போனில் சொல் கிறார்.

