பெங்களூரு: கர்நாடகாவின் மூன்று நாள் முதல்வரான எடி யூரப்பா நேற்று பதவி விலகுவதற்கு முன் சட்டமன்றத்தில் உணர்ச்சி மிகு உரையாற்றினார். கர்நாடக சட்டமன்றத் தேர்த லுக்குப் பிறகு காங்கிரஸ், மதசார் பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்க முடிவெடுத்து முதல்வர் வேட்பாளராக குமாரசாமியை முன்னிறுத்தியது. ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா, கர்நாடக ஆளுநரை சந்தித்த நிலையில், அவர் மே 17ஆம் தேதி முதல்வரானார்.
இந்நிலையில் நம்பிக்கை வாக் கெடுப்பை எதிர்கொள்வதற்கு முன் பதவி விலக முடிவு செய்த அவர் சட்டமன்றத்தில் உரையாற்றி னார். அப்போது,"கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் என்னை வேட்பாளராக அறிவித்தனர். கர்நாடக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க பாடுபடுமாறு எனக்குக் கட்டளை யிட்டனர். "கர்நாடகாவில் தனி பெரும் பான்மை கட்சியாக பாஜகவை தேர்வு செய்ததற்கு நன்றி. பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் மக்கள் எங்களுக்குக் கூடு தல் எம்எல்ஏக்களை அளித்துள்ள னர்.
"காங்கிரசும் மஜதவும் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதுதான் மக்களின் தீர்ப்பு. ஆனால் காங்கிரசும் மஜதவும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றன. "கர்நாடகத் தலைநகர் பெங் களூரில் குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. மேலும் மாநிலத் தில் விவசாயிகள் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன.

