இந்தியாவில் வேகமாகக் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா எச்சரிக்கை

இந்தியாவில் வேகமாகக் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா எச்சரிக்கை

1 mins read

புதுடெல்லி: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆராய்வதற்காகச் செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முதற்கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிஃபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.