மூன்று நாட்கள் கனமழை பெய்யும்

மூன்று நாட்கள் கனமழை பெய்யும்

1 mins read

குர்கான்: தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் மழைப் பொழிவு குறைவாக இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. கேரளாவில் வரும் 29ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், மத்திய அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், இதன் காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் இன்று முதல் 23ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.