திண்டுக்கல்: சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்றவர்களும் பலியாகினர். இச் சம்பவம் திண்டுக்கல் மாவட்டத் தில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 3 பேர் பலியானதாக காவல்துறையி னர் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது அந்த தனியார் பேருந்து. வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி பகுதியை நெருங் கிய போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.
இதையடுத்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. பேருந்தில் இருந்த பயணிகள் உதவி கேட்டு கூக் குரல் எழுப்பினர். இந்த விபத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் பேருந்தை நோக்கி ஓடிச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர். அப்போது பெங்களூரு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாஜி என்ற வியாபாரி மீட்புப் பணியில் உதவுவதற்காக தன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்து நோக்கிச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற மற்றொரு பேருந்து அவர் மீதும், சாலையில் நின்று கொண்டிருந்த மேலும் இருவர் மீதும் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

