தமிழக அரசு கைப்பாவை அல்ல என வைகோவுக்கு ஓபிஎஸ் பதில்

தமிழக அரசு கைப்பாவை அல்ல என வைகோவுக்கு ஓபிஎஸ் பதில்

1 mins read

மதுரை: மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது என்று வைகோ கூறுவது தரங்கெட்ட கருத்து என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி தண்ணீர் கிடைக்க தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார். "ஜூன் மாதம் குறுவை, சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் போதிய நீர் இருக்கும் பட்சத்தில் ஜூன் 12ஆம் தேதி அணையை திறப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம்.

"நீர் பற்றாக்குறை இருந்தால் நிலைமைக்கு தகுந்தவாறு அணை திறக்கப்படும் என்பது கடந்த கால வரலாறு. இது திமுக, அதிமுக ஆட்சிகளில் ஏற்கெனவே நடந்து இருக்கிறது. எனவே 12ஆம் தேதி திறக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபத்தமானது," என்றார் ஓ.பன்னீர்செல்வம்.