அமைச்சரின் மாமனார் வீட்டில் பணியாற்றிய பெண் படுகொலை

அமைச்சரின் மாமனார் வீட்டில் பணியாற்றிய பெண் படுகொலை

1 mins read

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் மாமனார் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விஜயபாஸ்கர் மாமனாரின் கார் ஓட்டுநர் கைதாகி உள்ளார். சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ஜெயந்தி. அமைச்சர் விஜயபாஸ்க ரின் மாமனார் வீட்டில் பணியாற்றி வந்தார். கடந்த 18ஆம் தேதி பணிக்குச் சென்ற ஜெயந்தி வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே உள்ள சாக் கடை கால்வாயில், சாக்கு மூட்டை யில் கட்டப்பட்டு சடலம் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்ட போலிசார் விசாரணை மேற்கொண் டனர். கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து உடனடியாக துப்பு கிடைக்கவில்லை. தொடர் விசா ரணையில் அது ஜெயந்தியின் சடலம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் போலிசார் விசாரணை மேற்கொண் டனர். அப்போது அவரது ஓட்டுநர் மணிவேல் மீது போலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவர் பல்வேறு கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார்.