காலவரம்பற்ற உண்ணாவிரதம்: ஜாக்டோ, ஜியோ அறிவிப்பு

1 mins read

சென்னை: எதிர்வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காலவரம்பற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ முடிவு செய்துள்ளன. உண்ணாவிரதம் முடியும் வரை மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தினமும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.