விமானநிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரிடம் மோதல்

விமானநிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரிடம் மோதல்

1 mins read

திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் மதிமுக பொதுச் செயலர் வைகோவும் சீமானும் ஒரே விமானத்தில் திருச்சி வந் தனர். இருவரையும் வரவேற்க ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடி இருந்தனர். ஒரே சமயத்தில் தலைவர்களை வரவேற்று இருதரப்பினரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பி னர்.

அப்போது வைகோ குறித்து நாம் தமிழர் கட்சித் தொண்டர் ஒருவர் விமர்சித்ததாகக் கூறப்படு கிறது. இதை மதிமுகவினர் தட்டிக்கேட்க, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்தது. இருதரப் பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் மதிமுக தொண்டர்கள் இருவர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் சீமான் உள்ளிட்ட எட்டு பேர் மீது கொலை முயற்சி உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.