'நீதிமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும்'

'நீதிமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும்'

1 mins read

மதுரை: காவிரி வழக்கில் அதிமுக அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத் தந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழக அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் முன் னிலையான வழக்கறிஞர்கள் ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்ததாகப் பாராட்டினார். இதன் காரணமாகவே 32 ஆண்டுகளாக நீடித்த காவிரி நதிநீர் பிரச்சினைக்கு இப்பொழுது தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது என்றும் முதல்வர் தெரிவித்தார். "உச்ச நீதிமன்றம் இறுதியான தீர்ப்பை கொடுத்திருக்கின்றது.

அதற்கு மேலும் சந்தேகத்தை எழுப்பிக்கொண்டே இருந்தால் அதை யார்தான் முடிவு செய்வது? எனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது. "நீதிமன்றத்தை நம்பித்தான் ஆகவேண்டும். ஒருசில கட்சி களைச் சேர்ந்த தலைவர்கள் தங்கள் பாணியில் பேசுகிறார்கள். அதற்கு நாங்கள் எப்படி விளக்கம் சொல்ல முடியும்?" என்றார் முதல்வர் பழனிசாமி.