நாடாளுமன்றத் தேர்தல்: களப் பணிகளைத் துவங்கும் தேமுதிக

1 mins read

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தினந்தோறும் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில், தேமுதிகவிலும் பல்வேறு மாற்றங் களைச் செய்ய அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகை யில் 40 புதிய நிர்வாகிகளை நியமிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். ஒரு நாடாளுமன்றத் தொகு திக்கு ஒரு நிர்வாகி வீதம் நிய மிக்கப்பட உள்ளதாகவும் அவர் கள் மிக விரைவில் களப் பணிகளைத் துவங்குவர் என்றும் கூறப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று புதிய நிர்வாகிகள் ஆய்வு நடத்தவேண்டும் என்று அறிவு றுத்தி உள்ள விஜயகாந்த், மாதந் தோறும் மாவட்டச் செயலருடன் கலந்துரையாட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.