வீட்டிற்குச் செல்ல அடம்பிடிக்கும் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள்; மேலிடம் மறுப்பு

1 mins read

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக வின் எடியூரப்பா முதல்வர் பதவி யில் இருந்து விலகிய நிலையில், தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பவேண்டிய எம்எல்ஏக் களின் கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்துவிட்டது. காங்கிரஸ், மஜத, சுயேட்சை கட்சியின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 15ஆம் தேதி முதல் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர்களைத் தங்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு கட்சி மேலிடம் முடிவு செய்தது.

ஆனால், பாஜகவினர் மீண்டும் காங்கிரஸ், மஜத உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற் சிக்கக் கூடும் என்பதால் நேற்று அந்த முடிவு கைவிடப்பட்டது. எனவே வரும் வியாழக்கிழமை குமாரசாமி முதல்வராகப் பொறுப் பேற்பார் என்றும் அன்றே தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப் பார் என்பதாலும் அதுவரை எம்எல் ஏக்களை அவர்களது சொந்த ஊருக்குத் திரும்ப அனுப்புவ தில்லை என்று மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, காங்கிரசிற்கு 20 அமைச்சர் பதவிகள் வழங்கப் படும் என கூறப்படுகிறது. மேலும் காங்கிரசின் பரமேஸ்வராவுடன் அக்கட்சியின் டி.கே.சிவகுமாரும் துணை முதல்வராகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.