எஸ்.வி.சேகரை கைது செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்

1 mins read

புதுடெல்லி: எஸ்.வி.சேகரை ஜூன் 1ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் குறித்தும் மிகவும் தரக்குறைவான கருத்தை பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் புகார் அளிக் கப்பட்டது.

புகார் மத்திய குற்றத்துறையின் இணையப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவு களின்கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இதையடுத்து தாம் கைதா காமல் இருக்க எஸ்.வி.சேகர் தலை மறைவானதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக எஸ்.வி. சேகர் தரப்பில் முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன்பிணை வழங்க மறுப்புத் தெரிவித்த உயர் நீதி மன்றம், எஸ்.வி.சேகர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததற்குக் கண்டனம் தெரிவித்தது.