ஆளுநரும் சுகாதார அமைச்சரும் செய்ததுகூட பாலியல் தொல்லைதான்: மாதர் சங்கம் விளாசல்

1 mins read
5525a889-3d9d-4808-8c3c-5e568343df8d
-

மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் அகில இந்திய ஜன நாயக மாதர் சங்க துணைத் தலைவருமான உ.வாசுகி நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித் தார். அரசு மற்றும் தனியார் பணி யிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சிறுமியர் பாலியல் கொலைகள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை அப்போது அவர் வெளியிட்டார். பின்னர் கூறுகையில், "மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேரா சிரியை நிர்மலாதேவி விவகாரத் தில் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இச்சம்பவத்தை தைரிய மாக அம்பலப்படுத்திய மாணவி கள் புத்திசாலிகள்.

மேலும் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டதும் சிபிசிஐடி இயக்குநர் மாற்றப்பட் டார். அதிலிருந்தே விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று தோன்றியது. அதனால் சிபிசிஐடி விசாரணையில் எங்களுக்கு நம் பிக்கை இல்லை. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். "இதற்காக, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்குமாறு உச்ச நீதி மன்றத்தை வலியுறுத்த இருக் கிறோம். "பெண் செய்தியாளருக்குக்கூட இங்கு பாலியல் வன்கொடுமை நிகழ்கிறது. ஆளுநர் கன்னத்தைத் தொடுவதும் அமைச்சர் விஜய பாஸ்கர் 'நீங்க அழகாக இருக் கீங்க, உங்க கண்ணாடி அழகாக இருக்கு,' என்று சொன்னதும்கூட பாலியல் தொல்லைதான்," என்றார் வாசுகி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் அகில இந்திய ஜன நாயக மாதர் சங்க துணைத் தலைவருமான உ.வாசுகி.