தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கிச்சூடு: தலைவர்கள் கண்டனம்

2 mins read
1a0f4fab-f896-44ac-951d-288278cfb829
-

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலிஸ் துப் பாக்கிச்சூடு நடத்தியதற்கு அரசி யல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள னர். திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ‚"நீண்ட நாட்களாக தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வரு வதை தமிழக அரசு கண்டு கொள்ளவும் இல்லை, சுமுகத் தீர்வு காணவும் இல்லை. வழக்கம் போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த தமிழக அரசின் அலட்சியத்தாலேயே இன்று மக்கள் பேரணி நடத்தி, அது துப் பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது.

"இன்றைய பேரணி பற்றி முன்பே அறிந்த காவல்துறை, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. இன்று தூத்துக்குடியில் நடந்த அசம்பா விதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமும் உளவுத்துறையின் தோல்வியும் தான். "இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் நல னுக்காக நடைபெறும் போராட்டங் கள் ஜனநாயக ரீதியிலும் அறவழி யிலும் நடந்திடும் வகையில் எதிர் காலத்திலாவது தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்," என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நேற்று பெரும் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை ஒடுக்க பெரிய அளவில் போலிஸ் படை குவிக்கப்பட்டது. ஆயுதப் படையும் கலவரத் தடுப்புப் படையும் விரைந்து வந்தன. தடையை மீறியோர் மீது போலிசார் தடியடி நடத்தினர்.