சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 890 தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் பயில்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 33 தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட படிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குறைவாக மாணவர்கள் உள்ள 890 தொடக்கப் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "தமிழக அரசு எந்த அளவுக்கு செயலிழந்துபோய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று," என்றார்.
பள்ளிகள் மூடல்; ஸ்டாலின் சாடல்
1 mins read

