நிபா வைரஸ் தொற்று: தாதி லினி உயிரிழப்பு

நிபா வைரஸ் தொற்று: தாதி லினி உயிரிழப்பு

1 mins read
884a8e10-0b89-41ab-8b92-43ae6561807a
-

கோழிக்கோடு: நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளித்த கேரள தாதி ஒருவரும் உயிரிழந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பெரம்பரா தாலுகா மருத் துவமனையில் தாதியாக பணி யாற்றி வந்தவர் லினி(31). நிபா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தாதி லினிக்கும் அந்த வைரஸ் தொற்றி யது. அதற்காக அவருக்குக் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாதி லினி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவருக்கு சஜீஸ் என்ற கணவரும் சித்தார்த்(5), ரிதுல்(2) என இரண்டு குழந்தைகளும் உள் ளனர். இதன் மூலம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 15ஐ எட்டி யிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தாதி லினியின் குடும்பத்தினர் செம்பநோடா பகுதி அருகே பெரு வன்ன முழியில் வசிக்கின்றனர். இந்நிலையில் லினியின் உடலை வீட்டிற்குச் கொண்டு சென்றால் பிறருக்கும் நோய் தொற்று ஏற்படலாம் என்று கருதி கோழிக்கோடு நகரின் மின் சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடத் தப்பட்டது.

தன் கணவர், பிள்ளைகளுடன் தாதி லினி. கோப்புப்படம்