புதுடெல்லி: சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இருக்கும் ஆபாச காணொளி களை முடக்க எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்துப் பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால் கூகல், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அப ராதம் விதித்துள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதி மன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் சமூக ஊடகங்கள் ஆபாச காணொளிகளை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த நிறு வனங்கள் பதில் தாக்கல் செய்ய வில்லை," என்றனர். அப்போது மத்திய அரசு தரப்பில் இணையத்தள கணினி குற்றம் குறித்துத் தகவல் தெரிவிக்க தனியாக இணையத் தளம் தொடங்கப்படவுள்ளதாக வும் ஜூலை 15ஆம் தேதிக்கு முன்பு அந்த வலைத்தளம் ஆரம் பிக்கப்பட்டுவிடும் எனவும் தெரி விக்கப்பட்டது.

