திருவள்ளுவர் சிலைக்குத் தடை

திருவள்ளுவர் சிலைக்குத் தடை

1 mins read

அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் அலகா பாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 'பாஷா சங்கம்' செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்பு அலகாபாத் சங்கமத்தின் தென் கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்து அவரது சிலை யையும் அமைக்க வேண்டி 1990ஆம் ஆண்டு முதல் கோரி வருகிறது. தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயருடன் அவரது சிலையும் அமைக்க கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அலகாபாத் மாநகராட்சி உத்தர விட்டது.

இதையடுத்து, இன்மா இண்டர் நேஷனல் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி திருவள்ளுவர் பெயர் இந்தி மற்றும் தமிழில் பொறிக் கப்பட்ட கல்வெட்டைத் திறந்து வைத்தார். அத்துடன் ரூ. 1 லட்சம் நன்கொடையாக அளித்தார். பாஷா சங்க பொதுச் செயலா ளராக இருக்கும் டாக்டர் எம்.கோ விந்தராஜன் கூறும்போது, "திரு வள்ளுவர் சிலை அமைக்க அளித்த மனுவை அப்பேதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் அல காபாத் மாநகராட்சிக்கு அனுப்பி னார். "அதன்பிறகு சாலைக்கு திரு வள்ளுவர் பெயரும் சிலையும் வைக்க மாநகராட்சி அனுமதி அளித்தது. ஆனால், அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவ தாகக் கூறி அலகாபாத் வளர்ச்சி ஆணையம் சிலை வைக்க தற் போது தடை விதித்துள்ளது," என தெரிவித்தார்.