தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செலவுக்குப் பணமில்லாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சி

1 mins read

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் கடும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாக தக வல் வெளியாகி உள்ளது. போதுமான நிதி கட்சித் தலைமையிடம் இல்லாததால் பல்வேறு மாநிலங்களிலுள்ள கட்சி அலுவலகங்களுக்குத் தேவையான நிதியை கட்சித் தலைமை கடந்த ஐந்து மாதங் களாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் நிதி திரட்டும் நடவடிக்கையை தீவிரப் படுத்துமாறும் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கட்சி சார்பில் அனைத்து மாநில காங் கிரஸ் அலுவலகத்திற்கும் அறி விப்பு அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

இதுகுறித்து பேசிய அக் கட்சியின் சமூக ஊடக பொறுப் பாளர் திவ்யா ஸ்பந்தனா, கட்சி யில் போதிய நிதி இல்லை என்று வெளியான தகவல் உண்மை யானதுதான் என்று தெரிவித் துள்ளார். நிதி வசூலிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட புதிய நடை முறையால் போதிய நிதி வர வில்லை எனவும் அவர் கூறி யுள்ளார். அடுத்த ஆண்டு நாடா ளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தேர்தல் செலவுக்கு என்ன செய்வது என்ற ஆலோ சனையில் காங்கிரஸ் மூழ்கி உள்ளது.