பெங்களூரு: கர்நாடகா முதலமைச்சராக எச்.டி.குமாரசாமி பதவி ஏற்றுள்ள நிலையில் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் கட்சியினர் பதவிப் பிரச்சினையை எழுப்பத் தொடங்கி விட்டனர். காங்கிரஸ் கட்சியின் ஜி.பரமேஸ் வரா துணை முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். காங்கிரசின் சோனியா, ராகுல், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி தலைவர் மாயாவதி உள்ளிட்ட பல எதிர்த்தரப்பு தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், 34 பேர் கொண்ட அமைச் சரவை ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அதில் 22 அமைச்சர் பதவிகளை காங் கிரசுக்குத் தர குமாரசாமி விருப்பம் தெரி வித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மேலும் பல காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், ஐந்து ஆண்டு பதவி காலத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆளவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வரு கிறது.
சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட் சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் 104 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. பின்னர் நடந்த திடீர் திருப்பமாக நம்பிக்கை வாக் கெடுப்பில் இருந்து பாஜக விலகியது. இந் நிலையில், 78 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் 37 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (மஜத) எச்.டி.குமாரசாமி 11 ஆண்டுகள் கழித்து இரண்டாவது தடவையாக முதல்வராகி உள்ளார்.

