அண்மையில் கூகலில் அதி கம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் மஜத கட்சியின் தலைவரும் கர்நாடக முதல்வ ருமான எச்.டி. குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா. கன்னட திரைப்பட உல கில் முன்னணி நடிகையாக இருந்த குட்டி ராதிகா, 32, தமிழில் இயற்கை, வர்ண ஜாலம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். குமாரசாமிக்கு ஏற்கெனவே முதல் திருமணம் ஆகி இரு மகள்கள் இருந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு ராதிகாவை ரகசியமாகத் திரு மணம் செய்துகொண்டார். அப்போது ராதிகாவுக்கு 20 வயது.
ராதிகாவும் ஏற்கெனவே மணமானவர். அவருக்கு 14 வயது இருந்தபோது ரத்தன் குமார் என்பவர் மணந்து கொண்டார். ஆனால் அடுத்த ஈராண்டுகளில் அந்தத் திரு மணம் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்தன் குமார் மரணமடைந்தார்.
குமாரசாமி=ராதிகா ரகசிய திருமணத்தால் குமாரசாமியின் பெயருக்கு பெருமள வில் களங்கம் ஏற்பட்டது. அதன் பின்பு சில வருடங்கள் கழித்து குமாரசாமி உடனான சர்ச்சைக்கு ராதிகா முற்றுப்புள்ளி வைத்தார். குமாரசாமியை தான் திரு மணம் செய்துகொண்டதாகவும் ஷிமிகா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் பகிரங்கமாக அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் இந்த சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. இந்நிலையில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் குறித்த பரபரப்புகள் ஊடகங்களில் வெளியானபோது குமாரசாமியின் மனைவி யார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் கூகலில் அதிகளவில் தேடிய விவரம் வெளியாகி உள்ளது.

