தூத்துக்குடி நேற்றும் கலவர பூமி யாக பற்றி எரிந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வன்செயல் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலிஸ்காரர்கள் நேற்றும் சுட்ட தாகவும் அதில் 22 வயது ஆடவர் ஒருவர் மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது-. தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துவிட்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் விரிவடைய தொடங்கி உள்ளது.
போலிஸ் வாகனங்கள் நேற் றும் கொளுத்தப்பட்டன. வாக னங்கள் மீது பெட்ரோல் குண்டு கள் வீசப்பட்டன. தூத்துக்குடி கலவர பூமியாகக் காட்சி அளிப்ப தாக ஊடகங்கள் தெரிவித்தன. ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்குப் பெரிய ஆபத்தை ஏற் படுத்துவதாகக் கூறி அந்த ஆலையை எதிர்த்து தூத்துக்குடி வட்டார மக்கள் தொடர் போராட் டம் நடத்தி வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை நடந்த 100வது நாள் போராட்டம் பெரும் வன்செயலாக மாறியது. ஏராள மான அரசாங்க வாகனங்களும் போலிஸ் வாகனங்களும் கொளுத்தப்பட்டன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான ஆர்ப்பாட்டக் காரர்களை துப்பாக்கியால் சுட்டும் லத்தியால் தாக்கியும் ரப்பர் தோட்டாக்களை பயன் படுத்தியும் போலிஸ் ஒடுக்கி வருகிறது. போலிஸ் துப்பாக்கி குண்டுகளுக்கு மொத்தம் 13 பேர் இரையாகி விட்டதாக தெரிவிக்கப் படுகிறது. படம்: ஏஎஃப்பி

