பலி எண்ணிக்கை 14 ஆனது; ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு

பலி எண்ணிக்கை 14 ஆனது; ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு

1 mins read

தூத்துக்குடியில் போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியா னோர் எண்ணிக்கை 14ஆக அதி கரித்துள்ள நிலையில், மூன்று நாட்களுக்குப் பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி நடந்த பேரணியின்போது போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு அனுமதி அளித்தது யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அனுமதி என்பதே இங்கு இல்லை. ஒருவர் உங்களை அடித்தால் உடனடியாக அதைத் தடுப்பதற் கான வழியைத்தான் செய்வீர்கள். அவ்வகையில், போலிசாரும் தங் களைத் தற்காத்துக்கொள்ளவே துப்பாக்கியால் சுட்டனர்," என்று கூறினார்.

தமிழக ஆளுநரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசியபின் முதல்வர் விளக்கமளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, முதல்வரைச் சந் திக்க அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறைக்குமுன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட் டோரை அங்கிருந்து குண்டுக் கட்டாகத் தூக்கி அப்புறப்படுத்திய போலிஸ், பின் கைது செய்தது. தலைமைச் செயலகம் முன்பும் ராஜாஜி சாலையிலும் திமுகவினர் போராட்டம் செய்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

ஆனால், சட்டசபை அலுவல் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், திடீரென அறையிலிருந்து வெளி யேறி நாடகமாடுகிறார் என்று முதல்வர் குற்றம்சாட்டினார். முன்னதாக, 144 தடை உத்த ரவை மீறி கலவரத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த் ததற்காக ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநா வுக்கரசர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.