பெங்களூரு: கர்நாடகாவில் குமார சாமி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொண்ட அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் பாஜ கவை வீழ்த்துவதைக் குறித்து ஆலோசித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால், கேரள மாநில முதல்வர் பின ராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சிபிஎம் தலைவர் சீத்தாராம் யெச் சூரி, சிபிஐ தலைவர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதாதள (சரத் யாதவ் அணி) தலைவர் சரத் யாதவ், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல எதிர்க்கட்சித் தலை வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். அப்போது எதிர்க் கட்சியினர் அளவளாவி மகிழ்ந்த னர்.
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி முதல்வராக பொறுப்பு ஏற்ற விழாவில் ஒன்றுசேர்ந்த எதிர்க்கட்சிகள். படம்: இந்திய ஊடகம்

