கொச்சி: கேரளாவில் 'நிபா' காய்ச்சலுக்கு ஒரு தாதியர் உட்பட பத்து பேர் உயிரிழந்துள்ள நிலை யில் பக்கத்து மாநிலமான கர்நாட காவிலும் இருவருக்கு 'நிபா' வைரஸ் கிருமி தொற்றியிருப் பதாக நம்பப்படுகிறது. இதனால் கர்நாடகாவிலும் 'நிபா' காய்ச்சல் பீதியை கிளப்பி யிருக்கிறது. கேரளாவில் 'நிபா' காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் 'நிபா' தலைதூக்கியிருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி யிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள மங்களூர் நகரில் 20 வயது பெண்ணுக்கும் 75 வயது முதியவருக்கும் 'நிபா' வைரஸ் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவரும் கேரளா மாநிலத் துக்குச் சென்று திரும்பியவர்கள் என்று கர்நாடகா மாநில சுகாதார அதிகாரி ராஜேஷ் பி.வி. கூறினார். இதற்கிடையே மத்திய சுகா தாரத் துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன், கேரளாவில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கண்யூர் ஆகிய 4 மாவட்டங்களில் 'நிபா' வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களுக் குச் சுற்றுலா பயணிகள் செல் வதைத் தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

