புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி யின் சவாலை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் அண்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மக்க ளுக்காக உழைக்கும் மோடியுடன் இணைந்து பணியாற்ற நாமும் உடலுறுதியுடன் இருப்பது அவ சியம் என்று அவர் வலியுறுத்தியிருந் தார். அதோடு தரையில் படுத்து பத்து முறை 'புஷ் அப்' செய்து காட்டினார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரும் இதுபோல உடற் தகுதியைக் காட்டும் காணொளியை வெளியிட வேண்டும் என்று ஒலிம் பிக்கில் பதக்கம் வென்றவருமான ராஜ்யவர்தன் ரத்தோர் சவால் விடுத்தார்.

