இத்தாலியில் ரயில் தடம் புரண்டதில் இருவர் பலி

இத்தாலியில் ரயில் தடம் புரண்டதில் இருவர் பலி

1 mins read

ரோம்: இத்தாலியின் டுரின் மாநிலத்தில் ரயில்வே கடப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரி மீது ஒரு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறின. புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்ததாகவும் சுமார் 18 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப் பட்டது. விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டதைத் தொடர்ந்து காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் கூறின.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனைத் தகவல்கள் கூறின.