சென்னை: மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைக்காது என தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தூத்துக்குடி சம்பவம் தமிழக அரசு வேத னைப்படக்கூடிய ஒன்று என்றார். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அமைச்சர், தூத்துக்குடி மக்களை தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் நிச்சயம் சந்திப்பர் என உறுதி அளித்தார்.
"தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் இணையத்தள சேவை முடக்கம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், நீதிமன்றம் என்ன உத் தரவு பிறப்பிக்கிறதோ அதன்படி தமிழக அரசு செயல்படும். தமிழக அரசு எப்போதும் மக்களோடு இருக்கும்," என்றார் ஜெயக்குமார்.

