அரசுக்கு திடீர் அக்கறை: கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்

அரசுக்கு திடீர் அக்கறை: கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றம்

1 mins read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் உடல்களைச் சம்பந்தப்பட்ட உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தோர் உடலைப் பதப்படுத்தி வைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்ற இயலாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

உடலை பதப்படுத்தி வைக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை அவசர மனுவாகக் கருதி நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. "துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் உடல்களைக் கேட்டு அவர்களின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வழிகாட்டு தல் நெறிமுறைகளை பின்பற்றி பிரேதப் பரிசோதனையும் நிறைவடைந்துவிட் டதால் உடல்களை ஒப்படைக்க அனுமதி வழங்க வேண்டும்," என அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

மேலும், மரணத்திற்குப் பின்னர் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய உறவினர்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து இவ்வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், எதிர்வரும் 30ஆம் தேதி வரையில் உயிரிழந்தோரின் உடலை பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டனர்.