தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 31 இடங்களில் மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 2,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர். கலைந்து செல்ல மறுத்த 317 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்தவர்களை ரிசர்வ் வங்கி அருகே போலிசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் முன்னணித் தலைவர் திலீபன் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். படம்: தமிழக தகவல் ஊடகம்
31 இடங்களில் போராட்டம்: 317 பேர் கைது
1 mins read
-

