புதுடெல்லி: பிரியங்கா காந்தி வத்ரா காங்கிரஸ் கட்சிக்குள் பல வழிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் இது தொடரும் என்றும் ஆனால் இதற்கு தேர்தலில் போட்டியிடு வார் என்று அர்த்தமில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. "பிரியங்கா காந்தி பல வழிகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதில் என்ன தவறுள்ளது? முன் னாள் அமைச்சர் சல்மான் குர் ஷித் தேர்தலில் நிற்பதற்காக பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறியுள்ளார். இது தவறு. பிரியங்கா அவர் விரும்பும் வழியைப் பின்பற்று வார்," என்றார் காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி.
'கட்சிக்குள் பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பார்'
1 mins read

