பட்டதாரிகளின் 'தந்தூரி தேநீர்'

1 mins read

புனே: ரோஜா தேநீர், ஊலாங் தேநீர், ப்ளாக் தேநீர், க்ரீன் தேநீர், இஞ்சித் தேநீர் என பலதரப்பட்ட தேநீர் மக்கள் பலராலும் விரும்பி அருந்தப்பட்டு வரும் நிலையில் தந்தூரி சிக்கன், தந்தூரி ரொட்டி யைப் போன்று புதிதாக பிரபல மாகி வரும் தந்தூரி தேநீரை புனேயைச் சேர்ந்த பட்டதாரிகள் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். புனேவை அடுத்த கராடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான பிரமோத், அமோல் ராஜ்டியோ 'தந்தூரி தேநீர்' கடையை நடத்திவரு கின்றனர்.

தந்தூரி அடுப்பில் வைக்கப்பட்ட சூடான மண்குடு வையில் சூடான தேநீரை ஊற்றி இயற்கையான முறையில் இந்தத் தேநீர் தயாராகிறது. தேநீருக்கான பாலையும் பழங்கால முறைப்படி மண் சட்டி யிலேயே சூடுபடுத்துகிறார்கள். இவர்களின் வித்தியாசமான அணுகுமுறை வாடிக்கையாளர் களை வெகுவாகக் கவர்ந்துள்ள தால் தந்தூரி தேநீரைப் பருக அப்பகுதி மக்கள் காட்டும் ஆர்வத்தால் கல்லா பெட்டியும் நிரம்பி வழிவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.