நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி

1 mins read
be96e291-ef7a-49c1-8849-e358508ebbce
-

பெங்களூரு: பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் கோபத்துடன் அவையை விட்டு வெளிநடப்பு செய்தபோதிலும் கர்நாடக முதல் வராகப் பதவியேற்று இருக்கும் எச்.டி.குமாரசாமி, சட்டமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பின்போது தனது பெரும் பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார். "விவசாயிகளின் கடனை வாக்குறுதி கொடுத்தபடி தள்ளுபடி செய்யவேண்டும்," என்று பி.எஸ். எடியூரப்பா வலியுறுத்திய நிலையில் அவையை விட்டு அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் வெளி நடப்பு செய்தனர். "இந்தக் கோரிக்கையை நிறை வேற்றாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் திங்களன்று நடத்தப் படும்," என்றும் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார். கடந்த புதனன்று இரண்டாவது முறையாக காங்கிரஸ்-மதச் சார் பற்ற ஜனதா தள கூட்டணியில் கர்நாடக முதல்வராகப் பதவி யேற்றுக்கொண்ட குமாரசாமி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக் கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

இவரைத் தொடர்ந்து பாஜகவை சேர்ந்த எடியூரப்பா குமாரசாமிக்கு எதிராக கோபமாகப் பேசினார். இதையடுத்து பாஜக கட்சி மொத்தமாக அவையைவிட்டு வெளியேறியது. இதனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரசு-மஜத கூட் டணிக்கு மொத்தம் 115 பேர் ஆத ரவு தெரிவித்தனர். பெரும்பான் மையை நிரூபிக்க 111 உறுப்பினர் களின் ஆதரவு போதுமானது.

படம்: ராய்ட்டர்ஸ்