எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்

எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்

1 mins read
ceabd672-a7ad-44d4-a936-8f5bce9ab79c
-

தூத்துக்குடியில் நடந்த துப்பாக் கிச்சூட்டைக் கண்டித்தும் ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி சுமார் 20,000 பேர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிடும் நோக்கில் பேரணியாகச் சென்றனர். அப்போது போலிசுக் கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போதும் மறுநாளிலும் போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் பலியாகினர்.

இந்தியாவையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று தமிழகத்திலும் புதுச்சேரி யிலும் போராட்டங்களை நடத்தின.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்ட புதுமணத் தம்பதியர். படம்: தமிழக ஊடகம்