திருச்சி: கேரளா மாநிலம் கோழிக் கோடு, மலப்புரம் பகுதிகளில் 'நிபா வைரஸ்' காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட 13 பேர் இதுவரை பலியாகியுள்ள னர். இந்நிலையில் கேரளாவில் சாலை அமைக்கும் பணிக்காக சென்ற திருச்சி மாவட்டம், மணப் பாறை அருகே உள்ள கைகாட்டி, கார்வாடி கிராமங்களைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் அண்மையில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களில் ஒரு வரான பெரியசாமி, 22, என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களாக காய்ச் சலுடன் கழுத்து வலி, தலை சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு ஏற்பட்டு சுவாசிப் பதிலும் பிரச்சினை இருந்துள்ளது.
இதனால் வேலைக்கு செல்லாமல் கேரளாவில் அவர்கள் தங்கி யிருந்த இடத்திலேயே இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து திருச்சி கார்வாடிக்கு அனைவரும் ஊர் திரும்பினர். இந்நிலையில் வீட்டில் இருந்த பெரியசாமிக்கு உடல்நிலை மோச மடைந்தது. சுய நினைவு இழந் தார். இதைத் தொடர்ந்து ஆம்பு லன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கும் பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக் கும் பெரியசாமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனி வார் டில் அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.

