வெளியேறமாட்டோம்: ஸ்டெர்லைட் அறிவிப்பு

1 mins read
51051395-e9ba-407d-84e1-682b7acc155a
-

சென்னை: தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் மக்கள் போராட்டம், உயிர்ப்பலி என கடந்த நான்கு நாட்களில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலையை அரசு மூடியுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறு வன தலைமை நிர்வாக அதிகாரி பி.ராம்நாத், ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள் ளார். வெளியிலிருந்து ஊடுருவிய சில கலவரக்காரர்களே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என குறிப்பிடும் அவர், ஆலையைத் தொடர்ந்து நடத்த தாங்கள் நடத்தி வரும் சட்டப்போராட்டம் தொடரும் என உறுதிபடக் கூறு கிறார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகி யோரைப்போல இருவருக்கு வேடமணிந்து அவர்களை புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஆர்ப்பார்ட்டக் காரர்கள். படம்: தமிழக ஊடகம்