தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை உச்சம்

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை உச்சம்

1 mins read

புதுடெல்லி: மோடி எதிர்ப்பு அலை பெரிய மாநிலங்களில் அதிகம் இருப்பதாகவும் அவற்றில் தமிழகம் உச்சத்தில் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2014 மே மாதம் பதவிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள் ளது. இந்நிலையில் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து லோக்நிதி = சிஎஸ்டிஎஸ் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் பெரிய மாநிலங்கள் அனைத்திலும் மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிர தேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா மாநில மக்களி டையே செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில் மோடி அரசு மீதான அதிருப்தி கடந்த ஆண்டைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் பீகாரில் மட்டும் அதி ருப்தி விகிதம் 29 விழுக்காடாக உள்ளது.

தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளா 64%, ஆந் திரா 68%, தெலுங்கானா 63% அதிருப்தி நிலவுகிறது. கர்நாட காவில் குறைந்தபட்சமாக 40% அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் மோடி அரசு மீதான அதி ருப்தி 55% ஆக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 75%ஆக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் மோடி அரசு மீது அதிக அதிருப்தி நிலவுகிறது.