முதல்வர் வீடு முற்றுகை

முதல்வர் வீடு முற்றுகை

1 mins read

சென்னை: தூத்துக்குடி துப் பாக்கிச்சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமியின் வீடு நேற்று முற்றுகையிடப்பட்டது. துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்குப் பொறுப் பேற்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவ ரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது வீட்டில் முதல மைச்சர் இருந்தாரா என்பது குறித்து தகவல் இல்லை. வீட்டின் முன் போலிசார் ஏராளமாகக் குவிக்கப்பட்டு இருந்தனர். இருப் பினும் முதலமைச்சருக்கு எதிராக வும் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப் பாட்டக்காரர்கள் முழக்கம் எழுப் பினர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.