ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட் டம் பாம்பனையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலம், சாலை பாலம் ஆகியன உள்ளன. இந்தப் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை தலைமை போலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவன், 'பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம். பாலம் வெடித்துச் சிதறும்' என கூறினான். இது பற்றி ராமநாதபுரம் மாவட்ட போலி சாருக்குத் தகவல் கொடுக்கப் பட்டது.
பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு சோதனை நடத்திய அதிகாரிகள். படம்: தமிழக ஊடகம்

