திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன் தினம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில், அக்கட்சியினர் ஏராளமானோர் கட்சிக் கொடிக ளுடனும், கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடனும் திரண்டனர். பின்னர் திமுக மகளிரணி செயலர் கனிமொழி எம்பி தலைமையில் பேரணியாகச் சென்று, எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் கைதாகினர். படம்: தகவல் ஊடகம்
சென்னை: சாலை மறியல்; கனிமொழி கைது
1 mins read
-

