மதுரை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஏதேனும் வெளிநாட்டுக்கும் பிரதமராக இருக்கிறாரோ என்று தமக்கு சந்தேகம் எழுந்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி ஆறு தல் வார்த்தை கூட சொல்லாதது வெட்கக்கேடானது எனவும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் விமர்சித்தார். "இந்தியாவில் உள்ள தமிழகத் தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 13 பேர் இறந்திருக்கிறார்கள்.
50 முதல் 60 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக் கின்றன. நியாயமாக, பிரதமர், தூத்துக்குடிக்கு நேரில் சென்றி ருக்க வேண்டும் அல்லது மத்திய அமைச்சர்களை அனுப்பி வைத்தி ருக்க வேண்டும்," என்றார் ஸ்டாலின். பிரதமர் ஆறுதல் கூறாதது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் உள்ள ஆட்சி செயல்படவே இல்லை என்றார்.

