சென்னை: தமிழகத்தை முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொண்டு வரும் நோக் கத்துடன் பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருவதாக விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடி உள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தூத்துக்குடி யில் நடந்த விவகாரங்களிலும் மத்திய அரசின் தலையீடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் எந்த நேரத்தி லும் மதம், சாதிகளின் பெயரால் வன்முறையை தூண்ட வேண் டும் என்று சிலர் நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு தமி ழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்றார்.
'தமிழகத்தில் வன்முறையை தூண்டுகிறது பாஜக அரசு'
1 mins read
-

