திருவள்ளூர் வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை

திருவள்ளூர் வங்கியில் ரூ.6 கோடி நகைகள் கொள்ளை

1 mins read

திருவள்ளூர்: வங்கியில் இருந்து ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவை அனைத்துமே அடமானம் வைக்கப் பட்ட நகைகள் என வங்கித் தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூரில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தின் முதல் தளத்தில் இயங்கி வருகிறது பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை.

அக்கட்டடத்தின் தரைத் தளத்தில் கடை ஒன்று இருக்கிறது. இந்நிலையில் அந்தக் கடைக் குள் புகுந்த கொள்ளையர்கள், மேல் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு வங்கி இருக்கும் முதல் தளத்தில் ஊடுருவியுள்ளனர். அதன்பிறகு எந்தவித சிரமமும் இல்லாமல் வங்கிப் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் 25 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.

மேலும்