சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்திறங்கிய இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ராயபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இப்ராஹிம் என்ற அந்த இளையரை அவரது நண்பரே கடத்தி உள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தனது கல்லூரி நண்பரான அமீன் (வயது 26) என்பவரிடம் ரூ.20 லட்சத்தைக் கடனாகப் பெற்றுள் ளார் இப்ராஹிம். அதில் ரூ.11 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்ட நிலையில் தொழிலில் நஷ் டம் அடைந்துள்ளார் இப்ராஹிம். இதனால் மீதமுள்ள தொகை யைக் கொடுக்கமுடியாமல் மலே சியாவுக்குச் சென்றுவிட்டார். சுமார் ஓராண்டுக்குப் பின்னர் நேற்று முன்தினம் சென்னை திரும்பினார் இப்ராஹிம்.

